என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » இலங்கை கனமழை
நீங்கள் தேடியது "இலங்கை கனமழை"
இலங்கையில் பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளத்தால் 2 லட்சத்து 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு அடைந்துள்ளனர்
கொழும்பு:
இலங்கையில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் வடகிழக்கு பருவமழை பெய்வது வழக்கம்.
இந்த ஆண்டு நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வழக்கத்தை விட அதிகமான மழைப்பொழிவு பதிவாகியுள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாக அங்கு தொடர்ச்சியாக கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் பல்வேறு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்தது. கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் 2 லட்சத்து 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், இலங்கையில் மழை, வெள்ளம் தொடர்பான சம்பவங்களில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 26 ஆக அதிகரித்துள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது வெள்ள நீர் வடிந்து வருவதால் பாதிப்பு அடைந்த பகுதிகள் படிப்படியாக இயல்பு நிலைக்குத் திரும்பி வருகின்றன என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
இதையும் படியுங்கள்...பேஸ்புக் பார்ப்பதை நிறுத்த தொழிலதிபர் செய்த காரியம்... வியப்படைந்த எலோன் மஸ்க்
இலங்கையில் கனமழை தொடரும் என்றும், 9 மாவட்டங்களுக்கு நிலச்சரிவு அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
கொழும்பு:
இலங்கையில் பலத்த மழை பெய்து வருகிறது. ரத்தினபுரி, கண்டி, மாத்தளை, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், மன்னார், புத்தளம், திரிகோணமலை, பதுளைகாலி, கேகாலை, நுவரெலியா, பதுளை ஆகிய 13 மாவட்டங்கள் மழை-வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஊருக்குள் புகுந்தன. வெள்ளம் மற்றும் மின்னல் தாக்கத்தால் இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
வெள்ளத்தில் சிக்கிய மக்களை மீட்பு படையினர் மீட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்தனர்.
பதுளை, கொழும்பு, காலி, கருத்துறை, கண்டி, கேகாலை, குருநாகல், மாத்தளை, ரத்தினபுரி ஆகிய 9 மாவட்டங்களுக்கு நிலச்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இலங்கையில் கனமழை தொடரும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் பெய்து வரும் கனமழையினால் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பாதிக்கப்பட்ட ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். #SriLankafloods
கொழும்பு:
இந்நிலையில், பதுலா, கேகலா மற்றும் காலுதரா பகுதிகள் பெருமளவில் பாதிக்கப்பபட்டுள்ளன. மழையினால் சுமார் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கபட்டுள்ளனர்.
இலங்கையில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. மழையுடன், பலத்த காற்றும் வீசி வருகிறது. மழையினால் பல ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் நிலச்சரிவும் ஏற்படும் அபாயம் உள்ளது என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
இந்நிலையில், பதுலா, கேகலா மற்றும் காலுதரா பகுதிகள் பெருமளவில் பாதிக்கப்பபட்டுள்ளன. மழையினால் சுமார் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கபட்டுள்ளனர்.
மழையினால் 170-க்கும் அதிகமான வீடுகள் சேதமடைந்துள்ளன. ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை வீரர்கள் பாதிக்கப்பட்ட இடங்களில் மீட்புப்பணிகளில் ஈடுபட்டுள்ளனர். மேலும், வெள்ளம் பாதிக்கப்பட்ட இடங்களில் விரைவில் மீட்புப்பணிகளை நடத்த அதிபர் சிரிசேனா அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். இலங்கையில் மேலும் சில நாட்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. #SriLankafloods
×

X